sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை சீமைக்கு 35 வயது திட்டங்கள் தீண்டாத ஒரு மாவட்டம் மந்தகதியில் மக்களின் பொருளாதாரம் வேலைதேடி இடம்பெயரும் சோகம்

/

சிவகங்கை சீமைக்கு 35 வயது திட்டங்கள் தீண்டாத ஒரு மாவட்டம் மந்தகதியில் மக்களின் பொருளாதாரம் வேலைதேடி இடம்பெயரும் சோகம்

சிவகங்கை சீமைக்கு 35 வயது திட்டங்கள் தீண்டாத ஒரு மாவட்டம் மந்தகதியில் மக்களின் பொருளாதாரம் வேலைதேடி இடம்பெயரும் சோகம்

சிவகங்கை சீமைக்கு 35 வயது திட்டங்கள் தீண்டாத ஒரு மாவட்டம் மந்தகதியில் மக்களின் பொருளாதாரம் வேலைதேடி இடம்பெயரும் சோகம்


ADDED : மார் 15, 2020 05:38 AM

Google News

ADDED : மார் 15, 2020 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டங்கள் தீண்டாத ஒரு மாவட்டம் மந்தகதியில் மக்களின் பொருளாதாரம்

வேலைதேடி இடம்பெயரும் சோகம்

ராமநாதபுரத்தில் இருந்து பிரிந்த மாவட்டம் சிவகங்கை. இதற்கான நடவடிக்கை 1984ல் எடுக்கப்பட்டது. 1985 மார்ச் 15 முதல் தனி மாவட்டமாக செயல்படுகிறது. மார்ச் 14 தனது

35வது வயதை பூர்த்தி செய்த சிவகங்கை மாவட்டம், இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

பின்தங்கிய மாவட்டம்


இம்மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, திருப்புத்துார், திருப்புவனம், காளையார் கோவில், சிங்கம்புணரி ஆகிய 9 தாலுகாக்கள் உள்ளன. சமீபத்தில் தான் சிங்கம்புணரி தாலுகா பிரிக்கப்பட்டது. சிவகங்கை, தேவகோட்டை என இரு வருவாய் கோட்டங்கள் செயல்படுகின்றன.

தேசவிடுதலைக்கு வீரர்களை அர்ப்பணித்த மண்; சமகால அரசியல்வாதிகள் பலரை அறிமுகம் செய்த மண்; வரலாற்று தொன்மையும் பாரம்பரிய மகிமையும் மிகுந்த மண் என்ற பெருமைகளை சுமந்தாலும், எள் முனையளவு வளர்ச்சியை கூட கண்டிராத மாவட்டம். கல்வி, தொழில், பொருளாதாரத்தில், மாநிலத்திலேயே பின் தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அழிவுப்பாதையில் விவசாயம்


காரைக்குடியை தவிர இதர தாலுகாக்களில் வளர்ச்சி இல்லை. மாவட்டத்தின் தலைநகரான சிவகங்கையில் கூட தொழில் வளர்ச்சி இல்லை. இதனால் வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு வருவோர் எண்ணிக்கை சொற்பம். அடிப்படை வசதியே மக்களுக்கு பற்றாக்குறை தான்.

தலைமையகமாக விளங்கும் கலெக்டர் அலுவலகத்திற்கே இது எட்டாக்கனியாக இருப்பது வேடிக்கை. ஒரு காலத்தில் 2.5 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயம் நடந்தது. அரசின் திட்டங்கள் எதுவும் இல்லாததால் தற்போது 1 லட்சம் ஏக்கர் விவசாயமே அதிசயமாகி விட்டது.ஒரு போக நெல் சாகுபடி கூட அனைத்து பகுதியிலும் சாத்தியப்படுவதில்லை. ராமநாதபுரத்தில் இருந்து தனியாக பிரிந்தால் எளிதான நிர்வாகம் நடத்தலாம் என அரசு கருதியது. அசாத்திய வளர்ச்சி சாத்தியப்படும் என மக்கள் எண்ணினர். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. ஏமாற்றமே

மிஞ்சியுள்ளது.

வளர்ச்சி வாசம் வீசுமா


அடிப்படை வசதி, தரமான கல்வி, உயரிய மருத்துவ சிகிச்சை, படிப்பிற்கேற்ற பணி,வேலைக் கேற்ற ஊதியம் எட்டாக்கனியாக உள்ளது. இதனால் பட்டதாரிகளும், குடும்ப தலைவர்களும் பிழைப்புத்தேடி பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு படையெடுக்கின்றனர்.இத்தனை ஆண்டுகளாகமத்திய, மாநில அரசுகள் 'அல்வா' கிண்டி தயாரித்த எந்த பட்ஜெட்களுமே பொருளாதார பாதாளத்தில் இருந்து சிவகங்கையை மீட்கவில்லை. புதிய திட்டங்கள் எதுவும் எட்டிப்பார்க்கவில்லை. வறுமையிலேயே 35 ஆண்டுகள் ஓடிவிட்டன.இனியேனும் சிவகங்கையில் வளர்ச்சி மலரின் வாசம் வீசட்டும்...!

கண் விழியுங்கள்ஆட்சி அரசர்களே...!

மக்களின் எதிர்பார்ப்புகளில் சில...


* 60 ஆண்டு கோரிக்கையான மதுரை-மேலுார்-திருப்புத்துார்-காரைக்குடி ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

* கானாடுகாத்தான் வேளாண் ஆராய்ச்சி மையத்தோடு இணைத்து வேளாண் கல்லுாரி துவங்க வேண்டும். குன்றக்குடி கால்நடை ஆராய்ச்சி மையத்தோடு கால்நடை மருத்துவக் கல்லுாரி துவங்க வேண்டும்.

* மருத்துவக்கல்லுாரி வந்த பிறகும் எலும்பு முறிவு, இருதய பிரச்னை, தலைக்காய சிகிச்சைகளுக்கு மதுரைக்கு செல்லவேண்டியுள்ளது. உயர் சிகிச்சையை இங்கேயே சாத்தியப்படுத்த வேண்டும்.

* காரைக்குடியில் நலிவடைந்து வரும் பாத்திரம், குத்துவிளக்கு தயாரிப்பு தொழிலை ஊக்கப்படுத்தி, வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானியம் வழங்கி

ஊக்கப்படுத்த வேண்டும்.

* சிவகங்கை நகரை மையப்படுத்தி தொழில் பூங்கா அமைக்க வேண்டும்.

* சிவகங்கை அருகே அமைக்கப்பட்ட ஸ்பைசஸ் பார்க் பயனற்று கிடக்கிறது. இதை முழுவீச்சில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ஒருபோகத்திற்கு கூடநீர் தருவதில்லை


ராமநாதபுரம், சிவகங்கையின் வறட்சியை போக்கவே முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டது. ஆனால் இன்றைக்கு இருமாவட்டங்களுமே நீர் பங்கீட்டில் புறக்கணிக்கப்படுகின்றன. வைகை ஆற்றை நம்பியுள்ள 87 கண்மாய்கள், 47 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நீர் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. ஒரு போகத்திற்கு கூட நீர் இல்லை.

சிவகங்கைக்கு வைகை ஆற்று மூலம் நீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். சரியான நீர் பங்கீடு இல்லாததால் நெல், தென்னை சாகுபடி அழிந்து வருகிறது. சிவகங்கை வைகையில் 38 குடிநீர் திட்டங்கள் உள்ளன. இவற்றுக்கென தனியாக நீர் ஒதுக்கீடு இல்லை. சீமைக்கருவேல மரங்களால் விவசாயம் பாழாகிறது.

மிளகாய், மல்லி சாகுபடியை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். விளை பொருட்களை மதிப்புகூட்டி விற்க திட்டங்கள் தேவை. இக்கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால்,

11 ஆறு, 5 ஆயிரம் நீர்நிலைகளுக்கு சொந்தம் கொண்டாடும் சிவகங்கையில் விவசாயம் இல்லாது போய்விடும்.

எல்.ஆதிமூலம்

பொதுச்செயலாளர், பூர்விக வைகை பாசன



விவசாயிகள் சங்கம்.

எட்டாக்கனியான உயர் சிகிச்சை


சிவகங்கை மருத்துவக் கல்லுாரி துவங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகின்றன. முதலில் ஒதுக்கப்பட்ட 100 எம்.பி.பி.எஸ்., சீட்களே இன்னமும் தொடர்கின்றன. ஏற்கனவே 150 சீட்கள் இருந்த மதுரை, திருநெல்வேலி கல்லுாரிகளுக்கு கூட கடந்த ஆண்டு கூடுதலாக 100 சீட் ஒதுக்கப்பட்டது. ஆனால் சிவகங்கையில் 100 சீட்டை 150 ஆக அதிகரிக்க நடவடிக்கை இல்லை.

கல்லுாரி துவங்கிய 5 ஆண்டுகளில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால்

இதுவரை ஒரு முதுகலை படிப்பு கூட கிடைக்கவில்லை. இப்படிப்புகள் கிடைக்கும் பட்சத்தில் தான் சிறப்பு சிகிச்சை பிரிவுகள், உயர் சிகிச்சை சாத்தியமாகும்.இவை எதுவும் இல்லாததால் சாதாரண தலைமை மருத்துவமனை போன்றே செயல்படுகிறது. நர்சிங் கல்லுாரி கேட்கப்பட்டு பல ஆண்டுகளாகி, இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை. உள்ளூரில் உயர் சிகிச்சை

கிடைக்காததால், மதுரைக்கு செல்ல வேண்டியுள்ளது. மருத்துவத்தில் தொடர்ந்து

புறக்கணிக்கப்படுவதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மருத்துவக் கல்லுாரி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உயர் சிகிச்சை தரக்கூடிய சிறப்பு பிரிவுகள் எதுவும் இல்லை. முதுகலை படிப்பு கிடைத்தால் மட்டுமே இது சாத்தியம். 5 படிப்புகளுக்கு அனுமதி கேட்டுள்ளோம். மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். நர்சிங் கல்லுாரி கோரிக்கையும் கிடப்பில் உள்ளது. ஏனோ அரசிற்கு கருணை இல்லை' என்றார்.

110 விதியில் அறிவித்த சிப்காட் எங்கே


இம்மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கி வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. 110 விதியில் காரைக்குடி அருகே திருச்சி ரோட்டில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. நில எடுப்பிற்காக தாசில்தார்கள் நியமிக்கப்பட்டனர்.

பின்னர் என்ன ஆனது என்றே தெரியவில்லை. சட்ட சிக்கல்களை களைந்து காரைக்குடி

பகுதியில்உடனடியாக சிப்காட் அமைக்க வேண்டும். சிங்கம்புணரி பகுதியில் கயிறு

உற்பத்தியை மேம்படுத்த திட்டங்கள் தேவை. அங்கு வாகனத் தயாரிப்பு தொழிற்சாலை

நிறுவினால் வேலை வாய்ப்பு பெருகும்.

கல்வி, சுற்றுலா, தொழில், சினிமா தொழில் வளர்ச்சி பெருகிய காரைக்குடியில் உள்நாட்டு விமான முனையம் அவசியம். ஒரு காலத்தில் செட்டிநாட்டில் போர் விமான தளம் இருந்தது. அதே இடத்தில் இதை கொண்டுவரலாம். மாவட்டத்தில் சிறு, குறு தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும். தேவகோட்டையில் அரசு கல்வி நிறுவனங்கள் துவங்க வேண்டும்.

சாமி.திராவிடமணி

தலைவர், காரைக்குடி தொழில் வணிக கழகம்.

கலெக்டர் என்ன சொல்கிறார்



சிவகங்கையின் 36வது பிறந்தநாளையொட்டி கலெக்டர் ஜெயகாந்தனிடம் கேட்கப்பட்ட

கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்:

* சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் காரைக்குடி அருகே திருச்சி ரோட்டில் 1000 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமையும் என்றார். இதுவரை அமைக்கப்படவில்லையே. ஏன்.

நில எடுப்பில் சிக்கல்கள் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்து. ஆனால் திட்டம் கைவிடப்படவில்லை. அப்பகுதியிலேயே விரைவில் இடம் தேர்வு செய்யப்படும். இதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. 1,000 ஏக்கர் என்பதை சற்று குறைத்தாவது, சிப்காட் அமைக்கப்படும்.

* காரைக்குடியில் 'உதான்'திட்டத்தில் விமான நிலையம் அமைகிறதா.

மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. காரைக்குடி செட்டிநாடு பகுதியில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். எனவே விமான நிலையம் அமைவதற்கான வாய்ப்பு அதிகம்.

* மதுரை- மேலுார்- திருப்புத்துார்- காரைக்குடி ரயில் பாதைக்கு வாய்ப்புள்ளதா.

அதற்கான அவசியம் இருந்தால் நிச்சயம் ரயில்வே நிர்வாகம் பணியை மேற்கொள்ளும்.

தற்போது மாவட்ட நிர்வாகம் முயற்சியால் மேலுார்- திருப்புத்துார்-காரைக்குடி ரோடு அகலப்படுத்தப்பட உள்ளது. முடிந்தளவு ரோடு வசதியை மேம்படுத்தி வருகிறோம், என்றார்.






      Dinamalar
      Follow us