/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகம் வெளியிட "எல்இடி' போர்டு; சிவகங்கையில் ஏற்பாடு

ADDED : ஜூன் 02, 2014 09:02 PM
சிவகங்கை
: குடிநீர் அவசியம், தண்ணீரை சேமிப்பதால் ஏற்படும் நன்மை குறித்த
வாசகங்கள் வெளியிட, சிவகங்கை கலெக்ட்ரேட் எதிரே, 'எல்இடி' போர்டினை,
குடிநீர் வடிகால் வாரியத்தினர் அமைத்துள்ளனர்.
முதல்வர் ஜெ., மழை நீர்
சேமிப்பின் அவசியத்தை, மக்களுக்கு ஏற்படுத்தி, வீடுகள், அலுவலகங்களில் மழை
நீர் சேகரிப்பு திட்டத்தை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இந்த பணிகளை,
குடிநீர் வடிகால் வாரியத்தினர் கண்காணிக்க வேண்டும் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நீர் சேமிப்பின் அவசியம் குறித்த,
விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்க, மாவட்டத்திற்கு ஒரு 'எல்இடி' போர்டு
வீதம், அனைத்து மாவட்டங்களுக்கும் போர்டு வழங்கப்பட்டுள்ளது. இவற்றை,
குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம்
எதிரே,மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர். ஒரு போர்டின் விலை ரூ.1 லட்சம்
வரை இருக்கும் என, பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே போன்று, சிவகங்கை
கலெக்ட்ரேட் ஆர்ச் அருகே, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 'எல்இடி'
போர்டு வைக்கப்பட்டுள்ளன. இதில், 24 மணி நேரமும், பொதுமக்கள் பார்க்கும்
வகையில், மழை நீர் சேகரிப்பின் அவசியம், தண்ணீரை சேகரிப்பதால் ஏற்படும்
நன்மை, குடிநீரின் தன்மை போன்றவை குறித்த, விழிப்புணர்வு வாசகங்கள்
வெளியிடப்படும். இது தவிர, குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், நடைபெற்று
வரும் திட்டங்கள் குறித்தும், தகவல்கள் வெளியாகும், என, குடிநீர் வடிகால்
வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.