/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பராமரிப்பில்லாத பிரான்மலை வேளார் ஊரணி
/
பராமரிப்பில்லாத பிரான்மலை வேளார் ஊரணி
ADDED : பிப் 08, 2025 04:59 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் பிரான்மலையில் 5 ஏக்கர் பழமையான வேளார் ஊருணி உள்ளது.
இந்த ஊருணி தண்ணீரை எடுத்து தான் திருக்கொடுங்குன்ற நாதருக்கு அபிஷேகம் செய்தனர். சில வருடங்களாக இந்த ஊருணி பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாகி, சீமைக்கருவேல மரங்கள், புதர் மண்டி காணப்படுகிறது. ஊருணியின் மேற்கு கரை குடிமகன்களின் புகலிடமாக மாறி வருகிறது.
மாலை நேரங்களில் 'குடி' மகன்கள் அங்கு கூட்டமாக அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் அவ்வழியாக மாசான கருப்பு கோவிலுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே ஊருணியை தூய்மைப்படுத்தி ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும். மேலும் சுற்றிலும் நடைபாதை, பூங்காக்கள் அமைத்து கிராம மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்தையும் அப்பகுதியில் உருவாக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.