தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குப்பை கொட்ட இடமில்லை துாய்மை பணியாளர்கள் போராட்டம்

 குப்பை கொட்ட இடமில்லை துாய்மை பணியாளர்கள் போராட்டம்

 குப்பை கொட்ட இடமில்லை துாய்மை பணியாளர்கள் போராட்டம்


ADDED : செப் 25, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 04:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனத்தில் தினசரி சேகரிக்கப்படும் குப்பையை கொட்ட போதிய இடம் இல்லை என கூறி குப்பை சேகரிக்க செல்லாமல் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்புவனத்தில் 18 வார்டுகளில் 33 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தினசரி 8 முதல் 10 டன் குப்பை சேகரிக்கப்படுகின்றன. 90 சென்ட் பரப்பளவுள்ள குப்பை கிடங்கு நிரம்பி வழிவதால் தினசரி குப்பைகளை ஆங்காங்கே கொட்டி தீ வைப்பதால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து அகற்ற தூய்மை பணியாளர்கள் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வருட கணக்கில் தேங்கிய குப்பையை இயந்திரம் மூலம் முதலில் அகற்றினர். இயந்திரத்திற்கு வாடகை வழங்க நிதி ஒதுக்காததால் பின் துாய்மை பணியாளர்களை கைகளால் தரம் பிரிக்க உத்தரவிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 23 நிரந்தர உட்பட 103 தூய்மை பணியாளர்கள் நேற்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.

பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், 33 ஆயிரம் பேர் வசிக்கும் ஊரில் குறைந்த பட்சம் 5 ஏக்கரில் குப்பை கிடங்கு வேண்டும். 90 சென்ட் இடத்தை வைத்து எப்படி குப்பைகளை கொட்டி தரம் பிரிக்க முடியும். 6 வருட குப்பை கிடங்கில் உள்ளன.

அவற்றை அப்புறப்படுத்தினால் மட்டுமே குப்பைகளை தரம் பிரிக்க முடியும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us