/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைப் பணியால் குழாய் சேதம் 15 நாட்களாக சப்ளை இல்லை
/
சாலைப் பணியால் குழாய் சேதம் 15 நாட்களாக சப்ளை இல்லை
சாலைப் பணியால் குழாய் சேதம் 15 நாட்களாக சப்ளை இல்லை
சாலைப் பணியால் குழாய் சேதம் 15 நாட்களாக சப்ளை இல்லை
ADDED : ஜன 07, 2025 04:46 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாய்கள்உடைக்கப்பட்டதால் 15 நாட்களாக தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் முட்டாக்கட்டியில் இருந்து பிரான்மலை செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பணிக்காக சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டியபோது, 800 மீட்டர் துாரத்திற்கு குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டன. உடனடியாக சரி செய்ய அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். ஆனால் அவற்றை கண்டுகொள்ளாத அதிகாரிகள் பள்ளத்தை மூடிவிட்டு சாலைப்பணியை தொடர்கின்றனர்.
இதனால் பிரான்மலை கடைவீதி, கிழக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம்இல்லை. 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.