தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ செயல்படாத ஏ.டி.எம்.,: மக்கள் அவதி

 செயல்படாத ஏ.டி.எம்.,: மக்கள் அவதி

 செயல்படாத ஏ.டி.எம்.,: மக்கள் அவதி


ADDED : ஜன 29, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: மானாமதுரை நகரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.,கள் செயல்படாமல் உள்ளதால் மக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மானாமதுரை புதிய பஸ் ஸ்டாண்ட், ஸ்டேட் வங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களுக்கு அருகில் வங்கி ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக இவற்றில் பெரும்பாலான ஏ.டி.எம்., மையங்கள் செயல்படாமல் முடங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது: மானாமதுரை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களுக்கு பெரும்பாலும் வங்கி கணக்கு மூலமாக சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில் மானாமதுரையில் 3 இடங்களில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,கள் இருந்தாலும் சில மாதங்களாக இவை செயல்படாமல் முடங்கி கிடப்பதால் பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது.

மற்ற வங்கி ஏ.டி.எம்.,களுக்கு சென்றாலும் இதே நிலை தான் நீடித்து வருகிறது.வங்கி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மானாமதுரையில் செயல்படாமல் கிடக்கும் ஏ.டி.எம்.,களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us