ADDED : ஜூன் 22, 2026 02:57 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூரில் குறுவட்ட அளவர் குடியிருப்பு கட்டடம் சிதிலமடைந்து கிடக்கிறது.
சிவகங்கை அருகே ஒக்கூரில் வருவாய்துறை குறுவட்ட அளவருக்கு 9 ஆண்டிற்கு முன் பல லட்ச ரூபாய் செலவில் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டித்தரப்பட்டுள்ளது.
ஆனால், ஆரம்பம் முதலே இக்குடியிருப்பில் குறுவட்ட அளவர் தங்கி பணிபுரியவே இல்லை. இதனால் காலப்போக்கில் இந்த கட்டடம் செயல்பாடின்றி, சிதிலமடைந்து செடிகள் வளர்ந்து கிடக்கிறது.
எனவே இந்த கட்டடத்தை சீரமைத்து வி.ஏ.ஓ., மற்றும் மண்டல துணை தாசில்தார் அலுவலகமாக மாற்றி செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
