/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவக் கல்லுாரியில் இயங்காத மின்விசிறிகள்
/
மருத்துவக் கல்லுாரியில் இயங்காத மின்விசிறிகள்
ADDED : நவ 20, 2025 03:34 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் வார்டில் மின் விசிறிகள் இயங்காததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள், தீக்காயப்பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு, பொது மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் உள்நோயாளிகளாக 800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி மகப்பேறு பிரிவில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.
பெண்கள் குறைந்தது ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெறும் சூழல் உள்ளது. இவர்களுக்கு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி கிடையாது. அதேபோல் பெரும்பாலான வார்டுகளில் மின் விசிறி இயங்குவதில்லை. தாய் வார்டில் போதிய படுக்கை வசதி இல்லாததால் அவசரத்திற்கு ஒரு படுக்கையில் இருவரை வைத்து சிகிச்சை அளிக்கும் சூழல் உள்ளது. புதிய தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தை விரைவில் திறக்கவும் தாய் வார்டை மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் குண்டும் குழியுமாக ரோடு உள்ளது. இந்த ரோட்டில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் உள்ள தார்ரோட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

