/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் வட மஞ்சுவிரட்டு
/
திருப்புவனத்தில் வட மஞ்சுவிரட்டு
ADDED : மார் 24, 2025 05:53 AM

திருப்புவனம்: திருப்புவனம் மாரியம்மன் கோயில் பங்குனி விழாவை முன்னிட்டு வட மஞ்சுவிரட்டு நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி துவக்கி வைத்தனர்.
பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஜல்லிகட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மொத்தம் 18 காளைகள் பங்கேற்றன. 20 நிமிடத்திற்குள் ஏழு வீரர்கள் காளையை அடக்க வேண்டும். போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்தனர்.
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கன்று குட்டியும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பசுவுடன் கூடிய கன்று பரிசாக வழங்கினர்.
காங்., நகர் தலைவர் நடராஜன், துணை தலைவர் பழனிவேல்ராஜன், மனோஜ், நாகேஸ்வரன் பங்கேற்றனர்.
சிவகங்கை: சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் வடமஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சிவகங்கை, மதுரை, திருச்சியில் இருந்து 12 காளைகளும் 108 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும் அடங்க மறுத்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.