/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிலவரி உள்ளிட்ட நிலுவையால் ரூ.பல கோடி வருவாய் இழப்பு :தாசில்தார்கள் உட்பட 45 பேருக்கு நோட்டீஸ்

ADDED : ஆக 16, 2025 02:36 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நில வரி உள்ளிட்ட வருவாய் இனங்கள் மூலம் ரூ.பல கோடி நிலுவை வைத்துள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறி தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் உட்பட 45 பேருக்கு கலெக்டர் பொற்கொடி குற்றச்சாட்டு குறிப்பாணை (17ஏ) நோட்டீஸ் அளித்துள்ளார்.
இம்மாவட்டத்தில் 9 தாலுகாக்களுக்கு உட்பட்டு ஏராளமான வருவாய் கிராமங்கள் செயல்படுகின்றன. ஆண்டு தோறும் நில உரிமையாளர்களிடம் நிலவரி வசூலித்தல், மரங்களை ஏலம் விடுதல் மூலம் கிடைக்கும் தொகை மற்றும் துறை சார்பில் விதிக்கப்படும் பல்வேறு அபராத தொகையை வசூலிக்காததன் மூலம் ரூ. பல கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற் பட்டுள்ளது.
வரிவருவாய் குறித்து கலெக்டர் பொற்கொடி ஆய்வு செய்த போது இந்த தகவல் வெளியானது. முறையாக நிலவரி உள்ளிட்ட வரி வருவாயை மேற்கொள்ளாத தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் உட்பட 45 பேருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை (17 ஏ) நோட்டீஸ் வழங்கி கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.
வருவாய்த்துறையினர் கூறியதாவது:
இத்துறை சார்பில் தினமும் 15,000க்கும் மேற்பட்ட வருவாய், ஜாதி உள்ளிட்ட சான்றுகள் வழங்கப்படுகின்றன. மேலும் 2000 பட்டாக்கள் வரை மாறுதல் செய்யப் படுகிறது. அரசு அறிவித்த 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' உள்ளிட்ட பல் வேறு அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டி யிருப்பதால் வரிவருவாய் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 45 பேருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை (17 ஏ) நோட்டீஸ் வழங்கியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.