நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தமிழவைய வாசிப்பு வட்ட முன்னெடுப்பில் நுால்கள் அறிமுக விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். வந்தோரை தமிழவைய வாசிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர் காளிராசா வரவேற்றார். தமிழவையத்தைச் சேர்ந்த வித்யா, பேராசிரியர் கற்பகம் நுால்களை அறிமுகம் செய்தனர்.
உறுப்பினர்கள் மகேந்திரன், செந்தில்குமார், நர்கீசுபானு, நாச்சம்மை, அந்தோணி, நுாலகர் செந்தில்குமார், எழுத்தாளர் ஞானபண்டிதன் கலந்து கொண்டனர். முன்னாள் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் இளங்கோவன் நன்றி கூறினார்.