UPDATED : ஜூலை 15, 2026 03:33 PM
ADDED : ஜூலை 15, 2026 02:00 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:செவிலியர்களை மறுபணி அமர்த்தும் அரசின் முடிவை கைவிடக்கோரி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் கலெக்டர் ஆகாஷிடம் மனு அளித்தனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் இச்சங்க மாவட்ட தலைவர் கிறிஸ்டி பொன்மணி தலைமையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள 17 அவசர கால மீட்பு மையத்திற்கு 292 செவிலியர்களை மறுபணி அமர்த்துவது மூலம் நியமிக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும். இந்த மையங்களுக்கு புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். நீண்ட காலமாக நிரந்தரம் கோரி காத்திருக்கும் 6,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் ஆகாஷிடம் வழங்கினர்.
