/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பணி நிரந்தரம் கோரி நர்ஸ்கள் போராட்டம்
/
பணி நிரந்தரம் கோரி நர்ஸ்கள் போராட்டம்
ADDED : டிச 20, 2025 06:46 AM

சிவகங்கை: தொகுப்பூதிய நர்சுகளை தேர்தல் வாக்குறுதிப்படி பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க தலைவர் கிறிஸ்டி பொன்மணி தலைமையில் அச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொகுப்பூதிய நர்சுகள் நேற்று சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதா கிருஷ்ணன் பேசினார்.
அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அனைத்து தொகுப்பூதிய நர்சுகளும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், மருத்துவ மற்றும் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டன. நர்சிங் கண்காணிப்பாளர் 3 பணியிடத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.
கொரோனாவின் போது பணிநீக்கம் செய்த நர்சுகளுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
பட்டம், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

