ADDED : ஜன 12, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : அரசு மருத்துவமனைகளில் செவிலியராக பணியில் சேர்ந்து செவிலியராகவே பணி ஓய்வு பெற்று செல்வதை தடுத்திட வேண்டும், பணி மூப்பு பட்டியலில் உள்ள செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், பதவி உயர்வு பெறும் நிரந்தர செவிலியர் காலி பணியிடங்களில் எம்.ஆர்.பி., ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும், பணியின் போது பாதுகாப்பின்றி பணிபுரியும் செவிலியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மானாமதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.