ADDED : டிச 11, 2025 06:59 AM
சிவகங்கை: சிவகங்கையில் சத்துணவு ஊழியர் காலி பணியிடத்தை நிரப்ப கோரி கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டி தலைமை வகித்தார். மாநில செயற்குழு ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் கலாராணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் லதா கோரிக்கையை விளக்கி பேசினார். மாநில துணை தலைவர் பாண்டிச்செல்வி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி உள்ளிட்டோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் நாகராணி நன்றி கூறினார். சத்துணவு மையங்களின் கீழ் காலியாக உள்ள 427 சமையலர், உதவியாளர் பணி யிடங்களை நிரப்ப கோரி கலெக்டர் பி.ஏ., (சத்துணவு) விடம் முறையிடும் போராட்டத்தை நடத்தி, மனு அளித்தனர்.

