/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ந.வைரவன்பட்டி பிரமோற்ஸவம் நிறைவு
/
ந.வைரவன்பட்டி பிரமோற்ஸவம் நிறைவு
ADDED : ஜூலை 31, 2025 10:50 PM

திருப்புத்துார்; திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடுடன் வயிரவசுவாமி பிரமோற்ஸவம் நிறைவடைந்தது.
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் கோயிலான இங்கு வயிரவ சுவாமிக்கு 11 நாட்கள் பிரமோற்ஸவம் நடைபெறும். ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் பிரமோற்ஸவம் துவங்கியது.
தினசரி காலை 9:15 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவு 7:00 மணிக்கு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. ஜூலை 28ல் வயிரவசுவாமி தேரில் எழுந்தருள தேரோட்டம் நடந்தது.
11ம் நாள் காலை 9:15 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கும்,வயிரவ சுவாமிக்கும் அபிேஷகம் நடந்து அலங்காரத்தில் எழுந்தருளினர்.
மாலை 6:00 மணிக்கு வளரொளிநாதருக்கும் வடிவுடையாம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள், வயிரவசுவாமி திருவீதிவலம் வந்தனர்.
ஏற்பாட்டினை விழாகமிட்டி தலைவர் நாகப்பன், செயலர் அய்யப்பன், உபதலைவர் சொக்கலிங்கம்,இணைச்செயலர் ராமசாமி,பொருளாளர் ராமசாமி செய்தனர்.