/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி வளர்ந்துள்ள கருவேல மரங்கள்
/
அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி வளர்ந்துள்ள கருவேல மரங்கள்
அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி வளர்ந்துள்ள கருவேல மரங்கள்
அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி வளர்ந்துள்ள கருவேல மரங்கள்
ADDED : மார் 14, 2024 11:39 PM

மானாமதுரை : கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென்று மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இப்பள்ளி வளாகத்தை சுற்றிலும் கருவேல மரங்கள்  அதிக அளவில் வளர்ந்துள்ளதால் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
விளையாட்டு பாடப்பிரிவில் பள்ளியை சுற்றி கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் விளையாட போதிய இடமின்றி தவித்து வருகின்றனர். பாம்புகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படகிறது. ஆகவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தைச் சுற்றி வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.