/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
லாடனேந்தல், மடப்புரம் ஊராட்சியை திருப்புவனத்துடன் இணைக்க எதிர்ப்பு
/
லாடனேந்தல், மடப்புரம் ஊராட்சியை திருப்புவனத்துடன் இணைக்க எதிர்ப்பு
லாடனேந்தல், மடப்புரம் ஊராட்சியை திருப்புவனத்துடன் இணைக்க எதிர்ப்பு
லாடனேந்தல், மடப்புரம் ஊராட்சியை திருப்புவனத்துடன் இணைக்க எதிர்ப்பு
ADDED : பிப் 10, 2024 04:51 AM

திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சியுடன் மடப்புரம், லாடனேந்தல் ஊராட்சியை இணைக்க கூடாது என ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சின்னையா தலைமையில் நடந்தது. பி.டி.ஓக்கள் அருண்பிரகாஷ், சாந்தி முன்னிலை வகித்தனர். மேலாளர் அருணாதேவி கூட்டப்பொருளை வாசித்தார்.
கவுன்சிலர் சுப்பையா: லாடனேந்தல் ஊராட்சியில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோரும் மடப்புரம் ஊராட்சியில் ஐயாயிரத்திற்கு மேற்பட்டோரும் வசிக்கின்றனர். இப்பகுதியில் வேலைவாய்ப்பு எதுவும் இல்லை. கிராமப்புற மக்கள் பலரும் 100 நாள் வேலை திட்டத்தை நம்பியே உள்ளனர். பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டால் கிராமங்களுக்கு என ஒதுக்கப்படும் நிதி கிடைக்க வாய்ப்பில்லை. வீட்டு வரி, குழாய் வரி உள்ளிட்டவை உயரும், என்றார்.
கவுன்சிலர் ஈஸ்வரன்: சங்கங்குளம் பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவு நேரங்களில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்களும் சேதமடைந்து வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
பொட்டப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமப்புற சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கும் தீர்மானம் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.