UPDATED : ஜூலை 09, 2026 04:34 PM
ADDED : ஜூலை 09, 2026 04:30 PM

தேவகோட்டை:தேவகோட்டையில் நகரில் நாள் நெருக்கடியால் பஸ் போக்குவரத்து பாதித்தது. வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கூட பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கடைக்கு வெளியே 20 அடி தூரத்திற்கு கடைகளை ஆக்கிரமித்து இருந்தனர். பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டி நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அமைத்திருந்தனர்.
தற்காலிக மார்க்கெட் பகுதிக்கு போகச் சொல்லியும் ஒரு சிலரை தவிர அந்த இடத்திற்கு கடைகளை மாற்றாததால் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகளை அமைத்தனர். நேற்று முன்தினம் கூட மார்க்கெட்டுக்கு செல்ல அறிவுறுத்தியும் வியாபாரிகள் அலட்சியமாக இருந்து விட்டனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அதிகாரிகள் அரசு இடத்தை அளவீடு செய்து குறியிட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று நகராட்சி பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்து துறை அலுவலர்கள் டி.எஸ்.பி. கண்ணன் தலைமையில் பலத்த போலீஸார் பாதுகாப்புடன் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை இயந்திரங்கள் மூலம் அகற்றினர்.
இன்று கண்டதேவி ரோடு, சந்தைபகுதி, தியாகிகள் ரோடு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்க உள்ளது.
