/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மூதாட்டி ஓட்டு வீடு மின் கட்டணத்திற்கு தீர்வு
/
மூதாட்டி ஓட்டு வீடு மின் கட்டணத்திற்கு தீர்வு
ADDED : டிச 30, 2025 05:41 AM
கீழடி: கீழடி அருகே சொட்ட தட்டி கிராமத்தில் மூதாட்டியின் ஓட்டு வீட்டிற்கு ரு.6ஆயிரம் மின் கட்டணம் வந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து மின் வாரிய அதிகாரிகள் தீர்வு கண்டுள்ளனர்.
சொட்டதட்டி கிரா மத்தில் 70 வயதான முனியம்மாள் தனது கண வருடன் வசித்து வந்தார். அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தில் பிழைத்து வரும் இவர்களின் ஓட்டு வீட்டிற்கு கடந்த மாதம் 5 ஆயிரத்து 967 ரூபாய் மின் கட்டணம் வந்து உள்ளது. ஏழு ரூபாய், 47 ரூபாய், 60 ரூபாய் என செலுத்தி வந்த இவர் களுக்கு ஐந்தாயிரத்து 967 ரூபாய் மின் கட்டணம் வந்த உடன் ஷாக் ஆகினர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவருக்கு கடந்த மாதம் மின்கட்டணம் ஏதும் இல்லை என்றும் தவறுதலாக மின்கட்டணம் பதிவு செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து அதனை ரத்து செய்தனர்.

