ADDED : ஜன 09, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை :   சிவகங்கை மாவட்டம் மாங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா 90. அதேபகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு  தவறான நோக்கத்துடன் சென்றார். மூதாட்டி  அரிவாளால் கருப்பையாவை வெட்டினார்.  காயமடைந்த கருப்பையா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில்  இறந்தார்.
போலீசார் கூறுகையில் 'மூதாட்டியும் முதியவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்தவர்கள்.  மூதாட்டி கணவரை பிரிந்து தனியாக வசிக்கிறார். இருவருக்கும் பிரச்னை இருந்துள்ளது.  மூதாட்டி மீது குற்றமற்ற கொலை வழக்கு பதிந்துள்ளோம். மரணத்தை உண்டாக்கும் எண்ணம் இல்லாமல் உடலில் காயத்தை உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணை நடக்கிறது 'என்றார்.

