ADDED : ஆக 07, 2026 04:16 AM

அ நிறம் | அளவு
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிதைந்த பயணிகள் நிழற்குடையில் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்கும் அவலம் உள்ளது.
பிரான்மலை ரோட்டில் வேங்கைப்பட்டி விலக்கில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை உள்ளது. இருக்கைகள் உடைந்தும், கூரை பெயர்ந்தும் பயணிகள் உள்ளே நிற்க முடியாதவாறு அச்சுறுத்தும் வகையில் உள்ளது. அப்பகுதி மக்கள் வெயிலுக்கும் மழைக்கும் வேறு வழின்றி அச்சத்துடன் இதை பயன்படுத்தி வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருப்பதால் இதை இடித்து விட்டு புதிய நிழற்குடை கட்டித்தர அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர்.
