ADDED : செப் 29, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி, செப். 30-
சாக்கோட்டை அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த வாகனம் விபத்தில் சிக்கி, டிரைவர் தப்பிய நிலையில் ஒன்றரை டன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுவயல், பள்ளத்துார் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலங்குடி அருகே கடத்தி வரப்பட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர், இந்நிலையில் சாக்கோட்டை வேங்கவயல் அருகே அரிசி கடத்தி வந்த வேன் ஒன்று விபத்தில் சிக்கியது. டிரைவர் தப்பிய நிலையில், வேனில் இருந்த ரேஷன் அரிசி குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் ஒன்றரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைபொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
