ADDED : அக் 22, 2024 04:56 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். வெளிநாட்டுக்குச் சென்றவர் தனது 16 வயது மகளை விடுதி ஒன்றில் விட்டுச் சென்றுள்ளார்.
விடுதி உரிமையாளரின் உறவினரான ராஜமாணிக்கம் 36 என்பவர் சிறுமிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.
விடுதியில் இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி ராஜமாணிக்கம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் ராஜமாணிக்கம் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
