ADDED : அக் 16, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மானாமதுரை அருகே கங்கையம்மன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துராமன் 20.
இவர் கீழப்பூங்குடி கிராமத்தில் ஒரு வாரமாக சர்க்கஸ் நடத்தி வந்தார். நேற்று மதியம் 3:30 மணியளவில் கீழப்பூங்குடியில் மரத்தில் இலை வெட்டினார். அப்போது மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முத்துராமன் இறந்தார்.