/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெட்ரோல் பங்க் உடைப்பில் ஒருவர் கைது
/
பெட்ரோல் பங்க் உடைப்பில் ஒருவர் கைது
ADDED : ஜன 21, 2024 03:37 AM
சிவகங்கை: மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டையில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.
இந்த பங்கிற்கு டிச.23ம் தேதி இரவு 11:20 மணிக்கு டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு பெட்ரோல் பங்கை வாள் மற்றும் அருவாளைக் கொண்டு உடைத்து சேதப்படுத்தினர்.
பணியில் இருந்த மேலமேல்குடி கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
மானாமதுரை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வேலுாரைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் காளீஸ்வரனை டிச.24 ம் தேதி கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
டிச.30ம் தேதி பூக்குளம் விலக்கு அருகே முருகப்பாஞ்சான் கிராமத்தைச்சேர்ந்த மாணிக்கவேல் மகன் வேல்முருகன் 21, மற்றும் ராஜேந்திரன் மகன் சக்திபிரியன் 20 இருவரையும் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த வேலுார் கிராமத்தைச் சேர்ந்த சிவசூரியன் மகன் நல்லுசாமி என்பவரை நேற்று எஸ்.பி., தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

