ADDED : மார் 17, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி பர்மா காலனி கற்பக விநாயகர்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் செந்தில்குமார் 45.
இவர் தேவகோட்டை ரஸ்தா அருகே சிப்காட்டில்தொழில் தொடங்குவது சம்மந்தமாக நேற்று காலை காரில் சென்றார். மானகிரி சங்கன்திடல் ரோடு பைபாஸில் சென்ற போது காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கார் விபத்தில் சிக்கியது.
இதில், செந்தில்குமார் தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிர்இழந்தார். சோமநாதபுரம்போலீசார் விசாரித்து வருகின்றனர்.

