நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சாக்கோட்டை அருகேயுள்ள கருநாவல்குடியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது 45. புதுவயலில் கடை நடத்தி வந்தார். இவர் காரைக்குடி சென்றுவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ்சில், பைக் நேருக்கு நேர் மோதியது.
இதில், சாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.