ADDED : பிப் 17, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை பையூர் பழமலை நகரை சேர்ந்தவர் சரவணன் 46.
இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அதிகாலை 5:20 மணிக்கு பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து தொண்டி ரோடு சமத்துவ புரம் ஆர்ச் அருகில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது தொண்டி ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சரவணன் இறந்துள்ளார்.
சிவகங்கை போலீசார் சரவணனின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.