/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில்வெங்காயம் விலை சரிவு
/
மானாமதுரையில்வெங்காயம் விலை சரிவு
ADDED : பிப் 01, 2024 04:20 AM
மானாமதுரை : மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாரி 5 கிலோ 100-க்கும், சின்ன வெங்காயம் 3 கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெரிய வெங்காயம் ரூ. 40லிருந்து ரூ.80 வரை விற்பனைசெய்யப்பட்டது. அதேபோன்று சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.60லிருந்து ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் வரத்து அதிகமாக இருப்பதை தொடர்ந்து விலை குறைந்து தற்போது மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ.100க்கும் சின்ன வெங்காயம் 3 கிலோ ரூ100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த வெங்காய வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக மழைக்காலம் என்பதால் வெங்காயத்தின் விளைச்சல்குறைவாக இருந்ததால் விலை அதிகமாக இருந்தது. தற்போது மழை காலம் முடிந்து விட்டதை தொடர்ந்து வெங்காயத்தின் விளைச்சல் அதிகமாக உள்ளதால் மொத்த மார்க்கெட்டுகளுக்கு வெங்காயத்தின் வரத்து அதிகமாக இருப்பதினால் விலை குறைந்துள்ளது என்றனர்.