/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆன்லைனில் கார் விற்பனை மோசடி: போலீசார் விசாரணை
/
ஆன்லைனில் கார் விற்பனை மோசடி: போலீசார் விசாரணை
ADDED : ஜன 17, 2024 11:56 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சண்முகநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 44.
இவர் பேஸ்புக்கில் குறைந்து விலைக்கு கார் விற்பனைக்கு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதில் பேசிய நபர்கள் காரின் போட்டோ மற்றும் ஆர்.சி., புக் போன்ற ஆவணங்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளனர். சுப்பிரமணியன் அதை நம்பி அவர்கள் அனுப்பிய இரண்டு வங்கி எண்களுக்கு 8 தவணைகளாக ரூ.40 ஆயிரம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றவர்கள் காரை அனுப்பாமல் ஏமற்றியுள்ளனர்.
சுப்பிரமணியன் தன்னை ஏமாற்றியவர்களை கண்டுபிடித்து இழந்த பணத்தை மீட்டு தருமாறுசிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.