/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆன்லைனில் மனையிட அனுமதிக்கான பயிற்சி
/
ஆன்லைனில் மனையிட அனுமதிக்கான பயிற்சி
ADDED : பிப் 21, 2024 11:40 PM

சிவகங்கை, - உள்ளாட்சி அமைப்புகளில் ஆன்லைனில் மனையிட அனுமதி வழங்குவது குறித்த பயிற்சி கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள நகர்புற ஊரமைப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா தலைமை வகித்தார். நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனர் பிரபாகர் முன்னிலை வகித்தார். நகர் ஊரமைப்பு துறை அலுவலர்கள் ஆன்லைனில் 'லே அவுட் அப்ரூவல்' வழங்குவது குறித்து செயல் முறை விளக்கம் அளித்தனர்.
இதில் சிவகங்கை, இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் தாலுகாவிற்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை சேர்ந்த தலைவர், செயல் அலுவலர்கள், செயலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கக்கூடிய மனையிட அனுமதிக்கான வரைமுறைகள்,அதற்கு மேல் உள்ள இடங்களுக்கு நகர்ஊரமைப்பு துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தே பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இது தவிர பொது, சேவை நிறுவனங்கள் அனைத்தும் நேரடியாக நகர் ஊரமைப்பு துறை மூலமே மனையிட அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.