/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆன்லைனில் முதலீடு ரூ.17 லட்சம் மோசடி
/
ஆன்லைனில் முதலீடு ரூ.17 லட்சம் மோசடி
ADDED : நவ 28, 2024 02:57 AM
சிவகங்கை:ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.17 லட்சம் மோசடி செய்தவரை சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகர் சண்முகம் மகன் சிவானந்தம் 44. சில மாதங்களுக்கு முன்பு முகநுாலில் ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என்ற விளம்பரத்தை பார்த்தார். அதில் உள்ள லிங்கை தொடர்பு கொண்டார். அந்த லிங்கில் இருந்து சிவானந்தம் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அந்த குறுஞ்செய்தியில் உள்ள நபரை சிவானந்தம் தொடர்பு கொண்டார். அவர் கூறிய வார்த்தையை நம்பி சிவானந்தம் 5 வங்கி கணக்கில் 5 தவணையாக ரூ.17 லட்சத்து 10 ஆயிரத்தை முதலீடு செய்தார். சில மாதங்கள் மட்டும் அவரது வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் வரை வரவு வைக்கப்பட்டுள்ளது. பின்னர் பணம் வரவில்லை. சிவானந்தம் அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முடியவில்லை. சிவானந்தம் தன்னை ஏமாற்றிய நபரை கண்டுபிடித்து ஏமாந்த தொகை ரூ.17 லட்சத்து 10 ஆயிரத்தை மீட்டு தருமாறு சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்.ஐ., முருகானந்தம் விசாரிக்கின்றனர்.