/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
52 போலீசாருக்கு வெறும் 5 குடியிருப்பு மட்டுமே
/
52 போலீசாருக்கு வெறும் 5 குடியிருப்பு மட்டுமே
ADDED : செப் 20, 2024 06:48 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 266 கிராமங்கள்உள்ளன. போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 எஸ்.ஐ., 12 சிறப்பு எஸ்.எஸ்.ஐ., 35 போலீசார்பணிபுரிகின்றனர். இவர்கள் தங்க காவலர் குடியிருப்பு இல்லை.
போலீஸ் ஸ்டேஷன் அருகே 20 வருடத்திற்கு முன் கட்டிய காவலர் குடியிருப்பு உள்ளது. இதில் 12 வீடுகள் உள்ளது. இதில் 5 வீட்டில் மட்டுமே போலீசார் குடும்பம் உள்ளது. மீதமுள்ள 7 வீடுகள் சேதம் அடைந்துஉள்ளது. 52 பேர் பணிபுரிகின்ற ஸ்டேஷனில் 5 பேர் மட்டுமே காவலர் குடியிருப்பில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் வாடகைக்கு தான் குடியிருந்து வருகின்றனர்.
காளையார்கோவிலில் சேதமடைந்துள்ள காவலர்குடியிருப்பை அகற்றி விட்டு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் குடும்பத்தோடு வசிப்பதற்கு ஏற்ற புதிய காவலர் குடியிருப்பு கட்டித்தர எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.