ADDED : ஆக 22, 2025 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை முன்னாள் ராணுவவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் சட்ட உதவி மைய திறப்பு விழா நடந்தது. உதவி இயக்குனர் விஜயகுமார் வரவேற்றார்.ஒஞ்ச ஒழிப்பு வழக்கு விசாரணை நீதிமன்ற நீதிபதி அனிதா கிறிஸ்டி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி ராதிகா முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜானகி ராமன்,சட்ட உதவி மைய வழக்கறிஞர் தனபாலன், முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் வேதராஜ், சிவகங்கை சீமை படைவீரர்கள் சங்க தலைவர் செல்வம் பங்கேற்றனர். அலுவலக கண்காணிப்பாளர் சரவணஜோதி நன்றி கூறினார்.