/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாசனத்திற்கு வைகையில் நீர் திறப்பு; கண்காணிப்பில் அதிகாரிகள்
/
பாசனத்திற்கு வைகையில் நீர் திறப்பு; கண்காணிப்பில் அதிகாரிகள்
பாசனத்திற்கு வைகையில் நீர் திறப்பு; கண்காணிப்பில் அதிகாரிகள்
பாசனத்திற்கு வைகையில் நீர் திறப்பு; கண்காணிப்பில் அதிகாரிகள்
ADDED : நவ 13, 2024 09:30 PM
திருப்புவனம்; ராமநாதபுர மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் வைகை ஆற்றில் பொதுப்பணிதுறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மூன்றாம் பூர்வீக பாசன பகுதி விவசாயிகளுக்காக நவ. 10ம் தேதி முதல் நவ. 18ம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு ஆயிரத்து 830 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைகை வலது மற்றும் இடது பிரதான கால்வாய்களின் ஷட்டர்கள் அடைக்கப்பட்டு தண்ணீர் ஆறு வழியே ராமநாதபுர மாவட்டத்திற்கு சென்ற வண்ணம் உள்ளது. தொடர்ந்து மழை இல்லாததால் தண்ணீரின் வேகம் குறைந்துள்ள நிலையில் ராமநாதபுர மாவட்ட பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது.
ராமநாதபுர மாவட்டத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் பிற பகுதி விவசாயிகள் தண்ணீரை திறக்கா வண்ணம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தண்ணீரின் வேகம்,தண்ணீர் வரும் அளவு உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். தட்டான்குளம், மாரநாடு, கட்டிகுளம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் ராமநாதபுர மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.