/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உயர்கல்வி சேர்க்கைக்கு படைவீரர் சார்ந்தோர் சான்று பெற வாய்ப்பு
/
உயர்கல்வி சேர்க்கைக்கு படைவீரர் சார்ந்தோர் சான்று பெற வாய்ப்பு
உயர்கல்வி சேர்க்கைக்கு படைவீரர் சார்ந்தோர் சான்று பெற வாய்ப்பு
உயர்கல்வி சேர்க்கைக்கு படைவீரர் சார்ந்தோர் சான்று பெற வாய்ப்பு
ADDED : மே 16, 2025 03:14 AM
சிவகங்கை: பிளஸ் 2 முடித்து உயர்கல்விக்கு செல்லும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் சான்று பெற முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, உயர்கல்விக்கு செல்ல விண்ணப்பித்து வருகின்றனர். அவர்கள் கல்லுாரியில் சேர விண்ணப்பத்துடன், படைவீரர் வாரிசு என்பதற்கான சார்ந்தோர் சான்றினை ஒப்படைக்க வேண்டும். இந்த சான்றினை சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பெற வேண்டும்.
சான்று பெற விரும்புவோர் exwelsvg@tn.gov.in என்ற மின்னஞ்சல் அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.
இச்சான்றினை பெற சுய விண்ணப்பம், கல்லுாரி சேர்க்கை விண்ணப்ப நகல், கல்வி மாற்று சான்று, மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்று, ஆதார் அட்டை நகல், படைப்பணி சான்று நகல், அடையாள அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மற்றும் தொகுப்பு நிதியில் இருந்து வழங்கும் கல்வி உதவி தொகையும் கிடைக்கும் என்பதால், உரிய விபரத்தை மாவட்ட முன்னாள் படை வீரர்நல அலுவலகம், சத்தியமூர்த்தி தெரு, சிவகங்கைக்கு நேரில் சென்று பயன்பெறலாம், என்றார்.