/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் அருகே கூடுதல் புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக கூறி
/
திருப்புத்துார் அருகே கூடுதல் புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக கூறி
திருப்புத்துார் அருகே கூடுதல் புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக கூறி
திருப்புத்துார் அருகே கூடுதல் புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக கூறி
UPDATED : டிச 24, 2025 05:37 AM
ADDED : டிச 24, 2025 05:36 AM

திருப்புத்துார்,:திருப்புத்துார் அருகே கூடுதல் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் விவசாய நிலம் பாதிக்காமல் கிராமத்திற்கு வெளியே மறுபுறம்
அமைக்க ரணசிங்கபுரம் கிராம மக்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார், திருப்புத்துார் அருகே கூடுதல் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் விவசாய நிலம் பாதிக்காமல் கிராமத்திற்கு வெளியே மறுபுறம் அமைக்க ரணசிங்கபுரம் கிராம மக்கள் கோரியுள்ளனர்.
திருமயம்-= மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை, கொட்டாம்பட்டி= -காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை, மேலுார்- =காரைக்குடி நான்கு வழிச்சாலை திருப்புத்துார் வழியாக செல்கிறது. இதில் திருமயம் =-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருப்புத்துாருக்கு வெளியே புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் சிவகங்கை ,-காரைக்குடி,-கல்லல்,-புதுக்கோட்டை ரோடு இணைகிறது.
மேலும் இந்த புறவழிச்சாலையுடன் மதுரை,திண்டுக்கல்,பொன்னமராவதி சாலைகளையும் இணைத்து நகருக்கு வெளியே வெளிவட்டச் சாலை அமைக்க பொதுமக்கள் கோரினர்.
இந்நிலையில் திருப்புத்துார் நகருக்கு கூடுதல் புறவழிச்சாலை அமைக்க முதல்வர் வருகையின் போது ரூ. 50 கோடி திட்டம் அறிவிக்கப்பட்டது. நெடுஞ்சாலை பிரிவினர் கூடுதல் புறவழிச்சாலைக்கான சர்வே செய்துள்ளனர். அதில் திருப்புத்துார் அருகே சிவகங்கை ரோட்டில் புறவழிச்சாலையில் காட்டாம்பூர் பகுதியில் துவங்கி ரணசிங்கபுரம் வழியாக மதுரை ரோட்டையும் கே.வைரவன்பட்டியில் திண்டுக்கல் சாலையில் சந்திக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான சர்வே பணிகளும் முடிந்துள்ளது.
இந்நிலையில் ரணசிங்கபுரம் கிராமத்தினர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராமத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் கூறுகையில்,‛ எங்கள் கிராமத்தின் பெரும்பான்மையான விவசாய நிலங்களான 300 ஏக்கர் பாதிக்கப்படுகிறது. பாரம்பரியமாக சொந்த ஊரில் விவசாயம் செய்வது, கால்நடை வளர்ப்பு, கிராம தெய்வ வழிபாடு அழிந்து விடும். மேலும், ரணசிங்கபுரம் பெரியகண்மாய்,இரட்டையன் கண்மாய்,முருகுடி கண்மாய், தச்சயான் கண்மாய்கள் உள்ளிட்ட நீராதாரங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளமும் பாதிக்கப்படும். மேலும் கிராம தெய்வங்கள் உள்ள சிறு கோயில்களும் பாதிக்கப்படும். இதனால் ரணசிங்கபுரம்,திருவுடையார்பட்டி கிராமங்களுக்கு வெளியே செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைக்க கோரியுள்ளோம்.' என்றனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மறு ஆய்வு செய்ய கிராமத்தினர் கோரியுள்ளனர்.
தற்போது திருப்புத்துார் நகர் பேரூராட்சி அந்தஸ்திலிருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது பரிசீலனையில் உள்ளது. அத்துடன், ரணசிங்கபுரம் ஊராட்சி திருப்புத்துார் பேரூராட்சியுடன் இணைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதனால் உத்தேசிக்கப்பட்டுள்ள திருப்புத்துார் நகராட்சி எல்லைக்கு வெளியே புதிய புறவழிச்சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் திண்டுக்கல் ரோட்டிலிருந்து கண்டவராயன்பட்டி ரோடு வழியாக என்.புதுார் புறவழிச்சாலை சந்திப்புடன் இணைக்கும் புறவழிச்சாலை ரோட்டையும் விரைவுபடுத்த கோரியுள்ளனர்.

