/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தை மாற்ற எதிர்ப்பு
/
இளையான்குடி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தை மாற்ற எதிர்ப்பு
இளையான்குடி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தை மாற்ற எதிர்ப்பு
இளையான்குடி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தை மாற்ற எதிர்ப்பு
ADDED : நவ 04, 2024 07:00 AM
இளையான்குடி ; இளையான்குடி நகர் பகுதியில் இயங்கி வந்த தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தை, புது பஸ் ஸ்டாண்ட் அருகே கொண்டு செல்ல விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த கடன் சங்கம் மூலம் இளையான்குடி தெற்கு, வடக்கு, கீழாயூர் கிராமங்களுக்கு உட்பட்ட ஏராளமான விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். இந்த கடன் சங்கம் மூலம் பயிர், நகை அடமான கடன், கால்நடை வளர்ப்பு கடன்களை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இச்சங்கத்திற்கு சொந்த கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியுள்ளது. எனவே புதுார் பழைய ரோட்டில் சங்கத்திற்கு சொந்தமான 32 சென்ட் நிலத்தில், பழைய போலீஸ் ஸ்டேஷன் வளாக பகுதியில் கட்டலாம்.
அதை விடுத்து சங்க நிர்வாகம், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
புது பஸ் ஸ்டாண்ட் பின்னால் சங்கம் சென்றால், விவசாயிகள் வெகு துாரம் அலையும் நிலை ஏற்படும்.
இதை தவிர்த்து, நகருக்கு அருகிலேயே சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.