ADDED : ஜூலை 30, 2025 10:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்; திருப்புவனத்தில் கட்டட பணிக்காக மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்புவனம் பத்திரப்பதிவு அலுவலகம் 1882ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கட்டடம் பழுதடைந்ததை தொடர்ந்து இரண்டு கோடியே 15 லட்ச ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட ஜூலை 22ல் அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். பத்திரப்பதிவு அலுவலகத்தைச் சுற்றிலும் 16 மரங்கள் உள்ளது. அதிகாரிகள் கட்டடப்பணிக்கு இடையூறு என கூறி 10 மரங்களை வெட்ட அனுமதி கொடுத்துள்ளனர். இதற்கு சி.பி.எம்., நகர செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து மரம் வெட்டும் பணியை நிறுத்தி சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.