/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளிக்கு முன் நிழற்குடைக்கு எதிர்ப்பு
/
பள்ளிக்கு முன் நிழற்குடைக்கு எதிர்ப்பு
ADDED : அக் 14, 2025 03:59 AM

பிரான்மலை: பிரான்மலையில் மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக, பள்ளி முன்பாக அமைக்கப்படும் பயணிகள் நிழற்குடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்குள்ள அரசு துவக்கப்பள்ளி முன்பாக சுற்றுலாத்துறை சார்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு, ஆசிரியர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இங்கு நிழற்குடை அமையும் பட்சத்தில் பள்ளி முன்பாக பஸ்கள் நிற்கும் போது, பக்க வாட்டில் வரும் மற்ற வாகனங்களால் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கு விபத்து அச்சம் ஏற்படும்.
இந்நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் கட்டுமான பணிகளை துவங்கினர். இதையடுத்து நேற்று பெற்றோர்கள் பள்ளி முன் கூடி அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.