ADDED : மார் 07, 2026 02:18 AM
சிவகங்கை: சிவகங்கையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீண்டும் நேற்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியின் தலைமையை ஏற்காத, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனியாக அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்பு குழுவை நடத்தி வந்தார். தொடர்ந்து பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.,வில் இணைக்க அக்கட்சியின் பொது செயலாளர் பழனிசாமி விரும்பவில்லை. பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர். முன்னாள் முதல்வர் ஜெ., அடையாளம் காட்டி, அவரது ஆதரவில் வளர்ந்த பன்னீர்செல்வம், தி.மு.க.,.வில் இணைந்ததை சிவகங்கை மாவட்ட ஆதரவாளர்கள் பலர் ஏற்கவில்லை. இதனால் மீண்டும் அ.தி.மு.க.,விலேயே தொடர முயற்சித்தனர்.
சிவகங்கை முன்னாள் நகர் செயலாளர் கே.வி.சேகர் தலைமையில் பன்னீர்செல்வம் அணியில் இருந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிர் அணியினர் 200க்கும் மேற்பட்டவர்கள் நேற்று விலகி, சிவகங்கையில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் எம்.எல்.ஏ., தலைமையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
