ADDED : ஜன 13, 2026 05:33 AM
திருப்புவனம்: ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்ய முடியாததால் கருவிழி ஸ்கேன் செய்து பொங்கல் பரிசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்புவனம் வட் டாரத்தில் 58 முழு நேர கடைகள், 21 பகுதி நேர கடைகள் மூலமாக 38 ஆயிரத்து 82 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது.
பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களின் ஸ்மார்ட் கார்டு மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு ரூ.3000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஆனாலும் 30 சதவிகித கார்டுகள் ஸ்கேன் செய் தாலும் விரல் ரேகை பதிய முடியவில்லை. இதனால் பொங்கல் பொருட்கள் வாங்க முடியாமல் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.
வரிசையில் காத்திருந்து விரல் ரேகை பதிய முடி யாததால் திருப்பி அனுப்பப்படுகின்றனர். பொங்கல் பரிசுத் தொகுப்பில் கருவிழி ஸ்கேன் செய்வது பிளாக் செய்யப்பட்டதால் அதுவும் செய்ய முடியவில்லை.
மக்களின் தொடர் புகாரையடுத்து ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்ய முடியாவிட்டால் கரு விழி ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம்.
போதிய வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்படாததால் ஒரு குடும்ப அட்டைக்கு வேட்டி அல்லது சேலை வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.
