/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேலைப்பளுவால் தவிக்கும் போக்குவரத்து கழக ஊழியர்கள்
/
வேலைப்பளுவால் தவிக்கும் போக்குவரத்து கழக ஊழியர்கள்
வேலைப்பளுவால் தவிக்கும் போக்குவரத்து கழக ஊழியர்கள்
வேலைப்பளுவால் தவிக்கும் போக்குவரத்து கழக ஊழியர்கள்
ADDED : ஜன 08, 2024 11:46 PM
திருப்புவனம் : தமிழகம் முழுவதும் வேலைப்பளு அதிகரிப்பதால் ஊழியர்கள் தவிப்பதுடன் போக்குவரத்து கழகங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
அரசு போக்குவரத்து கழகம் காரைக்குடி கோட்டம் சார்பில் 11 கிளை பணிமனை மூலம் நகர பேருந்துகள், தொலைதுார பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காரைக்குடி கோட்டத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளாக புதிய ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. கண்டக்டர், டிரைவர், மெக்கானிக், டீசல் மெக்கானிக் உள்ளிட்ட எந்த பணியிடமும் நிரப்பப்படவில்லை. வயது முதிர்வின் காரணமாக ஊழியர்கள் ஓய்வு பெறும் போது மீதமுள்ள ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது.
காரைக்குடி கோட்டத்தில் 88 டிக்கெட் பரிசோதகர்கள் பணியில் இருக்க வேண்டும், நடைமுறையில் 32 பேர் மட்டுமே பணிபுரிய வேண்டியுள்ளது. காரைக்குடி கோட்டம் சார்பில் சேலம், ஈரோடு, கோவை, கன்னியாகுமரி, திருச்செந்துார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தொலைதூர நகரங்களுக்கு ஒரே ஒரு பஸ் மட்டும் இயக்கப்படுவதும்உண்டு, 50சதவிகித டிக்கெட் பரிசோதகர்களே பணியில் இருப்பதால் அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்ய முடியவில்லை. இதனால் முறைகேடு அதிகரித்து போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
குறைந்த அளவு டிக்கெட் பரிசோதகர்களே இருப்பதால் யாருக்கும் அவசரத்திற்கு விடுமுறை அளிப்பதும் கிடையாது. இதனால் ஊழியர்கள் பணிச்சுமையால் மன உளைச்சல் ஏற்பட்டு பரிதவித்து வருகின்றனர்.
எனவே போக்குவரத்து கழகங்களில் காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.