ADDED : பிப் 01, 2024 11:43 PM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ரோடு ஆக்கிரமிப்பால் அரசு மருத்துவமனைக்கு செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். இப்பேரூராட்சியில் மேலுார் ரோட்டில் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஆர்ச் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர்.
காலை மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
ஆக்கிரமிப்பு கடைகளால் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே மேலுார் ரோட்டில் ஆர்ச் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையோர கடைகளை சீரணி அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைத்துக்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
