ADDED : மார் 06, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: கண்ணங்குடி ஒன்றியம், புத்துாரணி ஊராட்சி கன்னிக்குடியில் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட மேல்நிலை தொட்டில் மூடியின்றி, குப்பைகள் விழுவதால் குடிநீரில் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக தினமலரில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மேல்நிலை தொட்டியில் இருந்த அசுத்தமான நீரை அகற்றினர். உதவி செயற்பொறியாளர் பாலசந்தர் ஆய்வு செய்தார். பின்னர் மேல்நிலை தொட்டிக்கு மூடி போடப்பட்டு, காவிரி குடிநீர் வழங்கும் குழாய்களை சரி செய்தனர்.
இது போன்று பூதங்குடி, பாப்பனவயல் கிராமத்திலும் மேல்நிலை தொட்டி சுத்தம் செய்து தரப்படும் என தெரிவித்தனர்.
தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, தடையின்றி காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
