ADDED : செப் 16, 2026 03:32 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,செப்.17-
சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர் ஸ்ரீதர் ஓசோன் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். மாணவி ரித்திகா நன்றி கூறினார்.
கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக ஓசோன் தினம் அனுசரிக்கப்பட்டது. தலைமையாசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மீனாட்சி, கீதா, ஆரோக்கியசாமி பேசினர்.
