/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெல் கொள்முதல் மையம் நெல் முடிக்கரையில் திறப்பு
/
நெல் கொள்முதல் மையம் நெல் முடிக்கரையில் திறப்பு
ADDED : ஜன 11, 2025 06:24 AM
திருப்புவனம், : திருப்புவனம் நெல்முடிக்கரையில் இந்தஆண்டு முன்னதாகவே தற்காலிக நெல்கொள்முதல் மைய திறப்பு விழா நேற்று நடந்தது. நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண் பிரசாத், விவசாயிகள் சங்க பிரமுகர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மண்டல மேலாளர் அருண்பிரசாத் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், கணக்கன்குடி உள்ளிட்ட 32 இடங்களில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டதில் இருந்து 48 மணி நேரத்தில் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
தற்போது உடனுக்குஉடன் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. சன்னரக நெல்லுக்கு கிலோ 42 ரூபாய் 50 பைசா வழங்கப்படுகிறது.

