ADDED : செப் 01, 2026 03:57 AM

அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டையில் நண்பர்கள் நடையாளர் சங்கம் சார்பில் ஓவியப்போட்டி நடந்தது.
ரோட்டரி, காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம், ப்ளு டால்பின் மெட்ரிக் பள்ளி இணைந்து ஏற்பாடுகளை செய்தனர். நடையாளர் சங்க தலைவர் குமரப்பன் தலைமையில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.
ரோட்டரி தலைவர் திருவேங்கடம், காஸ்மாஸ் லயன்ஸ் தலைவர் நிட்டில்ராஜன், முதல்வர் ராஜன், நகராட்சி துணை தலைவர் ரமேஷ், முன்னிலை வகித்தனர். 50 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
