ADDED : ஜன 04, 2024 02:19 AM
சிவகங்கை; சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் என்னை கவர்ந்த முதல்வர்கள்' என்ற தலைப்பில் ஓவிய போட்டி பரிசளிப்பு மற்றும் கண்காட்சி நடந்தது. காப்பாட்சியர் பக்கிரி சாமி வரவேற்றார். இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் பகீரதநாச்சியப்பன் கண்காட்சியை துவக்கி வைத்தார். ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது.
மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன், செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை துறை ஓய்வு உதவி இயக்குனர் இளங்கோ, ஐ.ஓ.பி., ஓய்வு அலுவலர் அனந்தராமன், ஆசிரியர் காளிராஜா, தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் வாழ்த்துரை வழங்கினர்.
ஓவியப்போட்டியில் முதல் பரிசு சூரக்குளம் ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி 8 ம்வகுப்பு மாணவர் முகமது ரிபா, இரண்டாம் பரிசு புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளி 8 ம் வகுப்பு மாணவர் ராஜசேதுபதி, மூன்றாம் பரிசு 8 ம் வகுப்பு மாணவி தேஜாஸ்ரீ பெற்றனர். அரசு அருங்காட்சியக இளநிலை உதவியாளர் கங்கா பிரசாத் நன்றி கூறினார்.